மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம்.. டைட்டில் இதுவா?

மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம்.. டைட்டில் இதுவா?


சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் கடந்த 27-ந் தேதி ‘தீர வீர சூரன் 2’ படம் வெளியானது. மதுரையை மையமாக கொண்டு கேங்ஸ்டர் கதையில் உருவாகியுள்ள இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை எஸ்.யு.அருண்குமார் இயக்கியுள்ளார்.

அதனை தொடர்ந்து விக்ரம் ‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘விக்ரம் 63’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘மாவீரன்’ படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகின.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகிற மே மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘வீரமே ஜெயம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.�

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *