"மஞ்சும்மல் பாய்ஸ்" படத்தில் இடம்பெற்ற "குணா குகை" உருவான வீடியோ வெளியீடு

"மஞ்சும்மல் பாய்ஸ்" படத்தில் இடம்பெற்ற "குணா குகை" உருவான வீடியோ வெளியீடு


இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி கடந்த ஆண்டு பிப்ரவரி 23 ம் தேதி வெளியான இப்படம் கேரளாவை விட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்தது.

2024-ம் ஆண்டில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை டைரக்டர் சிதம்பரம் இயக்கினார். மஞ்சும்மல் பாய்ஸ் படம் மலையாள சினிமா வரலாற்றில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்கிற மகத்தான சாதனையை படைத்தது. இப்படத்தின் இந்த மெர்சலான வெற்றிக்கு காரணம் தமிழ்நாட்டில் அதற்கு கிடைத்த வரவேற்பு தான். தமிழ்நாட்டில் மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.

படத்தில் இடம் பெற்ற கண்மணி அன்போடு காதலன் பாடல் மற்றும் காட்சிகளும் இணையத்தில் மிகப்பெரிய ஹிட்டாகி வைரலானது. திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 1 ஆண்டு முடிவடைந்தது. இதனை முன்னிட்டு படக்குழு குணா குகை செட் எப்படி செய்தனர் என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

View this post on Instagram

A post shared by Parava films (@paravafilms)

இந்த வீடியோவை பார்க்க மிகவும் ஆச்சர்யம் நிறைந்ததாக இருக்கிறது. நிஜ குணா குகையை போலவே ஒரு செட்டை உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து இயக்குனர் மற்றும் கலை இயக்குனர் பேசுகின்றனர். பெருமளவு ஈடுபாட்டுடன் பல பேருடைய உழைப்பின் பலனாக அந்த குகையை உருவாக்கியுள்ளனர்.

View this post on Instagram

A post shared by Parava films (@paravafilms)

இந்த படத்தின் கதை கரு ஒரு உண்மை சம்பவம் ஆகும். கேரளாவிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்து குணா குகைக்குள் கால் தவறி விழுந்த நண்பனை உயிருடன் மீட்டு காப்பாற்றி அவரை மீண்டும் கேரளாவுக்கு அழைத்துச் செல்வதுதான் இந்த படத்தின் கதைகளமாகும். இந்த குணா குகை குறித்து 32 ஆண்டுகள் கழித்து மற்றொரு படமான “மஞ்சும்மல் பாய்ஸ்” வெளியான நிலையில் குணா குகைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகிறார்கள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *