”மக்கள் மொபைல் போன் பயன்படுத்தினால் நடிப்பதை நிறுத்திவிடுவேன்” – பிரபல நடிகர்…காரணம் என்ன?|”‘If people use mobile phones, I will stop acting'”

”மக்கள் மொபைல் போன் பயன்படுத்தினால் நடிப்பதை நிறுத்திவிடுவேன்” – பிரபல நடிகர்…காரணம் என்ன?|”‘If people use mobile phones, I will stop acting'”


சென்னை,

பிரபல தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸ். இவர் தற்போது ஹாரர் திரில்லர் திரைப்படமான ”கிஷ்கிந்தாபுரி”-ல் நடித்துள்ளார். அனுபமா கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது.

தற்போது புரமோஷன் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்தவகையில், சமீபத்திய ஒரு நேர்காணலில், பெல்லம்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸ் ஒரு துணிச்சலான சவாலை வெளியிட்டார். அது இப்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

அவர் கூறுகையில், ”எந்த படம் ரசிகர்களை கடைசி வரை கவர்ந்திழுக்கிறதோ அதுதான் வெற்றி பெற்ற படம் என்று அழைக்கப்படுகிறது. ‘கிஷ்கிந்தாபுரி’யும் அப்படிப்பட்ட ஒரு படம்தான்.

படம் திரையிடப்பட்டு 10 நிமிடங்களுக்குப் பிறகு மக்கள் தங்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்தினால் நான் திரைப்படத் துறையை விட்டு வெளியேறிவிடுவேன். நடிப்பதை நிறுத்திவிடுவேன்” என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *