மகேஷ் பாபுவின் பிறந்தநாளில் ”எஸ்எஸ்எம்பி29” பட அப்டேட் கொடுத்த ராஜமவுலி

ஆர்.ஆர்.ஆர் பட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘எஸ்எஸ்எம்பி 29’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடாமல் ரகசியமாகவே உள்ளது. இப்படம் ரூ. 1,000 கோடி பட்ஜெட்டில் உருவாவதாக கூறப்படுகிறது. இதில் பிருத்வி ராஜ், பிரியங்கா ஜோப்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், நடிகர் மகேஷ் பாபு இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், மகேஷ் பாபுவின் பிறந்தநாளையொட்டி ‘எஸ்எஸ்எம்பி 29’ படத்தின் அப்டேட்டை இயக்குனர் ராஜமவுலி வெளியிட்டுள்ளார். அதில், கிளிம்ப்ஸ் புகைப்படத்தை வெளியிட்டு, படத்தின் முக்கிய அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார்.