மகேஷ்பாபுவை தொடர்ந்து ராஜமவுலியுடன் கூட்டணி சேரப்போவது இவரா?

சென்னை,
இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனராக வலம் வரும் ராஜமவுலி தற்போது மகேஷ்பாபுவை வைத்து “எஸ்எஸ்எம்பி 29” என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்காக கிட்டத்தட்ட 2.5 ஆண்டுகள் மகேஷ்பாபு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.
காசியின் வரலாற்றை பேசும் கதைக்களமாக உருவாகி வரும் இப்படம் 2 பாகங்களாக வெளியாக இருக்கிறது. ரூ.450 கோடி பட்ஜெட்டில் படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. 2027-ம் ஆண்டு இப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அந்தவகையில் மகேஷ்பாபுவை தொடர்ந்து ராஜமவுலியுடன் அல்லு அர்ஜுன் கூட்டணி சேர இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.