"மகாவதார் நரசிம்மா" படத்தின் 5 நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா?

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 திரைப்படங்களின் மூலம் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்திய அளவில் பிரபலமானது. அதனைத்தொடர்ந்து, ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சலார்’ படமும் ரூ.700 கோடிக்கும் மேல் வசூலித்தது.
‘மகாவதார் நரசிம்மா’ படத்தை அஸ்வின் குமார் எழுதி இயக்க சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். மேலும், ஹோம்பலே பிலிம்ஸ் வழங்கும் இப்படத்தை ஷில்பா தவான், குஷால் தேசாய் மற்றும் சைதன்யா தேசாய் ஆகியோர் கிளீம் புரொடக்சன்ஸ் கீழ் தயாரிக்க உள்ளனர். இப்படம் கடந்த 25ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை மையப்படுத்திய அனிமேசன் கதாபாத்திரங்கள் இடம் பிடித்திருக்கிறது.
‘மகாவதார் நரசிம்மா’ திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் அதிகம் வசூலாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் வரவேற்பை முன்னிட்டு திரைப்படம் இலங்கை, ஆஸ்திரேலயா, மலேசியா மற்றும் யூரோப் ஆகிய நாடுகளில் இன்று வெளியாகியுள்ளது.