''மகாவதார் நரசிம்மா' என்னை அழ வைத்தது – ராகவா லாரன்ஸ்

சென்னை,
மகாவதார் நரசிம்மா படத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் பாராட்டி இருக்கிறார்.
தற்போது ராகவா லாரன்ஸ் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எல்.சி.யு (லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்) திரைப்படமான ”பென்ஸ்” மற்றும் தனது தம்பியுடன் ”புல்லட்” உட்பட பல படங்களில் பணியாற்றி வருகிறார்.
இதற்கிடையில், சமீபத்தில் வெளியான அனிமேஷன் படமான மகாவதார் நரசிம்மாவை திரையரங்குகளில் குடும்பத்தினருடன் சென்று அவர் பார்த்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நல்ல சினிமா அனுபவம். பல காட்சிகளில் படம் என்னை கண்ணீர் மல்க வைத்தது. அந்த காட்சிகளை உயிர்ப்பித்ததற்காக இயக்குனர் அஸ்வின், தயாரிப்பாளர் ஹோம்பலே பிலிம்ஸ் மற்றும் முழு குழுவினருக்கும் எனது மிகப்பெரிய நன்றி” என்று தெரிவித்திருக்கிறார்.