மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை தீபிகா படுகோன்

தீபிகா படுகோன் தமிழில் கோச்சடையான் படம் மூலம் அறிமுகமானார். இந்தியில் வெளியான ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் அறிமுகமான அவர் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்து பிரபலமானார். பாலிவுட்டில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் ரன்வீர் சிங் – தீபிகா படுகோன். திரையுலகில் இருவரும் இணைந்து நடித்து வந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் உலகளவில் ரூ. 1100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அல்லு அர்ஜுன் இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக தீபிகா படுகோன் நடித்து வருகிறார். இந்தியாவின் முதல் மனநல தூதராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இதுவரை மகளின் முகத்தை வெளியிடாமல் வைத்திருந்த தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங், இப்போது முதன்முறை தீபாவளிக்கு தங்கள் மகளின் முகத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதை பாலிவுட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.






