மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற கிங்காங்கிற்கு புதுப்பட வாய்ப்பு வழங்கிய டி.ராஜேந்தர்

மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற கிங்காங்கிற்கு புதுப்பட வாய்ப்பு வழங்கிய டி.ராஜேந்தர்


தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்குப் பெயர் போனவர் நடிகர் கிங்காங். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவர், நடிகர் ரஜினிகாந்தின் ‘அதிசயபிறவி’ படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் உள்ளிட்ட பலருடன் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார் கிங்காங். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கிங்காங்.

இவருக்குத் திருமணமாகி கலா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், மகன் ஒருவரும் உள்ளனர். இவரின் மகளுக்கு வரும் ஜூலை 10ம் தேதி சென்னை அசோக் பில்லர் பகுதியில் இருக்கும் மஹாலில் திருமணம் நடைபெறுகிறது. இதையொட்டி நடிகர் கிங்காங், திரையுலகில் இருப்பவர்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் திருமண அழைப்பிதழ் வைத்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட டி.ராஜேந்திரனுக்குத் திருமண அழைப்பிதழ் கொடுக்க அவரது வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அப்போது திருமண அழைப்பிதழைப் பெற்றுக் கொண்ட டி.ராஜேந்திரன், “உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீங்கள் என் படத்தில் நடித்ததில்லை. நான் படம் ஒண்ணு ஆரம்பிக்கிறேன்.அதுல சின்ன கதாப்பாத்திரம் ஒண்ணு இருக்கு. அதுல நீங்க நடிக்கணும்” என்று தனது படத்தில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.

இதுகுறித்த காணொலியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் நடிகர் கிங்காங், “மகள் திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற எனக்கு, புதுப்பட வாய்ப்பைக் கொடுத்தார் இயக்குநர் டி.ராஜேந்தர்.எனது மகள் கீர்த்தனா திருமண பத்திரிக்கையை இயக்குனர் டி.ராஜேந்தர் அவர்களிடம் அளித்தேன். பத்திரிக்கை வாங்கிக் கொண்ட டி.ஆர், தான் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்தார். இரட்டை மகிழ்ச்சி” என்று நன்றி தெரிவித்துப் பதிவிட்டிருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Actorkingkong (@actor_kingkong)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *