மகனின் கனவை நனவாக்க தங்கத்தை அடமானம் வைத்த அம்மா…இப்போது அவர் பிரபல இயக்குனர்…யார் தெரியுமா?|Can you guess this director who took loan from his mothers gold and entered movies

சென்னை,
மேலே உள்ள புகைப்படத்தில் இருக்கும் சிறுவனை உங்களுக்கு நினைவிருக்கிறதா?. இப்போது அவர் தெலுங்கு சினிமாவில் நட்சத்திர இயக்குனர். இவர் தனது படிப்பை முடித்த பிறகு, குறும்படங்கள் எடுக்க விரும்பி இருக்கிறார். ஆனால் அவரிடம் கேமரா வாங்க பணம் இல்லை.
இதனால், தன் மகனின் கனவை நனவாக்க, அம்மா தன் தங்கத்தை அடமானம் வைத்து 44 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார். அதை வைத்து அவர் கேமரா வாங்கி குறும்படங்களை எடுத்தார். ஒன்றல்ல, இரண்டல்ல, 30 குறும்படங்களை எடுத்தார். இதன் மூலம் யூடியூபில் நன்கு பிரபலமானார்.
அதன் பிறகு, அவர் தனது குறும்படங்களை இயக்குனர் பூரி ஜெகந்நாத்திடம் காட்டி இருக்கிறார். அவற்றைப் பார்த்த அவர் ” நீ யாருக்கும் உதவியாளராகப் பணியாற்றத் தேவையில்லை. நீயே படங்களை இயக்கு” என்று கூறி அவரை ஊக்கப்படுத்தி இருக்கிறார்.
இப்போது அவர் டோலிவுட் துறையில் பிரபல இயக்குனராக உள்ளார். இளம் வயதிலேயே, பிரபாஸ், பவன் கல்யாண் போன்ற நட்சத்திர ஹீரோக்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களைத் இயக்கினார். அவர் வேறு யாருமல்ல, ”ஓஜி” பட இயக்குனர் சுஜித்தான்.
30க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கியுள்ள சுஜீத், 2014-ம் ஆண்டு ”ரன் ராஜா ரன்” திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். தனது முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்தார். இரண்டாவது படமான ”சாஹோ” மூலம் இந்திய அளவில் பிரபலமானார். இப்போது ”ஓஜி” திரைப்படத்தின் மூலம் மேலும் பிரபலமாகி இருக்கிறார்.