போதைப் பொருட்களை எதிர்த்து மினி மாரத்தான்… நடிகர் விமலை முற்றுகையிட்ட போட்டியாளர்கள்|Mini marathon against drugs… Competitors besieged by actor Vimal

மதுரை,
மதுரையில் நடிகர் விமலை முற்றுகையிட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்த மாரத்தான் போட்டியார்களால் பரபரப்பு ஏற்பட்டது.
போதைப்பொருட்களுக்கு எதிராக தனியார் சார்பில் மினி மாரத்தான் போட்டி மதுரையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விமல், நடிகர் ஜிகர்தண்டா காளையன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் விமல் மேடையில் பேச முயன்றார். அப்போது, போட்டியாளர்களுக்கு முறையாக பரிசு பொருட்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கவில்லை என மேடையில் ஏறிய போட்டியாளர்கள் நடிகர் விமலை முற்றுகையிட்டு குற்றச்சாட்டுகளை கூறினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டநிலையில், மேடையில் இருந்து நடிகர் விமர் கீழே இறங்கி சென்றார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.