பொங்கிய நடிகை நிவேதா பெத்துராஜ்| Famous Actress Nivetha Pethuraj

சென்னை,
‘ஒருநாள் கூத்து’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் நிவேதா பெத்துராஜ்.அதன்பின் டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத் தமிழன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமன்றி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். நடிப்பு மட்டுமல்லாமல் பேட்மிண்டன், பார்முலா ஒன் கார் பந்தயம் போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்ட இவர், போட்டிகளிலும் பயிற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
செய்தி பார்க்க எந்த தளத்திற்குப் போனாலும், கொலை, போர், கொடுமை காட்சிகள் எளிதாக பரிமாறப்படுகிறது. நாம்தேடாவிட்டாலும் தினமும் அதை நுகர்கிறோம். இந்த அளவு வன்முறை நம்முள் உள்ள மனிதத்தன்மையை அழித்து விடும். தகவலை அறிய வேண்டுமென்றால் வேறு வழி தேவை என அதில் பதிவிட்டுள்ளார்.