‘பைரவம்’ பட விழாவில் வைப்-ஆன அதிதி ஷங்கர்|Aditi Shankar gets a vibe at Trailer launch of the film ‘Bairavam’

சென்னை,
‘பைரவம்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அதிதி ஷங்கர் , மேடையில் நடனமாடி வைப்-ஆன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. கார்த்திக்கு ஜோடியாக ‘விருமன்’ படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்த இவர், தற்போது தெலுங்கில் ‘பைரவம்’ படத்தின் மூலம் அறிமுகமாக போகிறார்.
விஜய் கனகமெடலா இயக்கியுள்ள இந்தப் படம், வருகிற 30-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஆந்திராவின் எல்லூரில் நடந்தது.
அதில் மஞ்சள் நிற உடையில் கலந்துகொண்ட அதிதி ஷங்கர், மேடையில் டான்ஸ் ஆடி வைப்-ஆனார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.