“பைசன்” படத்திற்கு முதல் விமர்சனம் கொடுத்த பிரபல இயக்குனர்

சென்னை,
மாரி செல்வராஜ், நடிகர் துருவ் விக்ரமை வைத்து ‘பைசன்’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. இப்படம் அக்டோபர் 17ந் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜின் குருநாதரும் பிரபல இயக்குனருமான ராம், இந்த படத்தை பார்த்துவிட்டு தெரிவித்த விமர்சனம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, “மாரி செல்வராஜ் இதுவரை இயக்கிய படங்களில் இதுதான் தலைசிறந்த படைப்பு” என இயக்குனர் ராம் கூறியுள்ளாராம். இதனை மாரி செல்வராஜ் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.