பைசன்- காளமாடன் வெல்லட்டும்”- மாரி செல்வராஜின் படத்தை பாராட்டிய உதயநிதி | “May Bison-Kalamadaan win

பைசன்- காளமாடன் வெல்லட்டும்”- மாரி செல்வராஜின் படத்தை பாராட்டிய உதயநிதி | “May Bison-Kalamadaan win


சென்னை,

மாரி செல்வராஜ், நடிகர் துருவ் விக்ரமை வைத்து ‘பைசன்’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில், பைசன் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், படத்தையும் படக்குழுவினையும் பாராட்டி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “பைசன் திரைப்படம் பார்த்தேன். மீண்டும் ஒரு முக்கியமான படைப்பைத் தந்திருக்கிறார் மாரிசெல்வராஜ் சார்.

வன்முறை நிறைந்த வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில், கபடி விளையாட்டில் சாதித்து அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரின் வாழ்வை சிறப்பாக படமாக்கி இருக்கிறார். ஓர் இளைஞன், எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய கபடி விளையாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும், அதுவே அவனை இலக்கை நோக்கி உயர்த்துவதையும் தனக்கே உரிய பாணியில் மாரி சார் கிராப்ட் செய்திருக்கிறார்.

படம் பேசுகிற அரசியலை உள்வாங்கி மிகச்சிறப்பாக நடித்திருக்கும் தம்பி துருவ் விக்ரம் உட்பட படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள். பைசன் – காளமாடன் வெல்லட்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *