”பேரன்பும் பெருங்கோபமும் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்” – அன்புமணி ராமதாஸ்|”Peranbum Perungobamum’ Movie Congratulations on the success”

சென்னை,
பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம், ‘பேரன்பும் பெருங்கோபமும்’. இதில், அவருக்கு ஜோடியாக ஷாலி நிவேகாஸ் நடித்துள்ளார்.
மைம் கோபி, அருள்தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். சிவபிரகாஷ் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.
நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இப்படம் பெற்றி பெற வாழ்த்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில்,
”இயக்குனர் தங்கர் பச்சான் அவர்களின் புதல்வர் விஜித் பச்சான் கதையின் நாயகனாக நடித்து வெளியாகியிருக்கும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது . சிறப்பாக நடித்திருக்கும் அன்புத் தம்பி விஜித் பச்சானின் திரையுலக வெற்றிப் பயணத்திற்கு நல்ல தொடக்கமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. ‘பேரன்பும் பெருங்கோபமும்’ திரைப்படம் வெற்றி பெற படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.