"பேரன்பும் பெருங்கோபமும்" டிரெய்லர் வெளியானது

சென்னை,
பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்கும் படம், ‘பேரன்பும் பெருங்கோபமும்’. அவர் ஜோடியாக புதுமுகம் ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார். மைம் கோபி, அருள்தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜே.பி.தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். சிவபிரகாஷ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
படம் பற்றி இயக்குனர் சிவபிரகாஷ் கூறும்போது, “நாயகனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக இதன் கதை எழுதப்பட்டுள்ளது. சமூகத்தால் இழைக்கப்பட்ட தீமைகளை நாயகன் எப்படி எதிர்கொண்டான்? என்பதைச் சுவாரசியமான திருப்பங்களுடனும் இந்தப் படம் சொல்லும்” என்றார். நல்ல சிந்தனை கொண்ட சாமானியனைப் பற்றிய கதை என்று ரியோட்டா மீடியா படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் “பேரன்பும் பெருங்கோபமும்” படத்தின் டீசர் வெளியானது.
இந்நிலையில் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.