பெயரில் மாற்றம் செய்த மீனாட்சி சவுத்ரி.. என்ன காரணம் தெரியுமா?

பெயரில் மாற்றம் செய்த மீனாட்சி சவுத்ரி.. என்ன காரணம் தெரியுமா?


சென்னை,

‘கொலை’, ‘சிங்கப்பூர் சலூன்’, ‘தி கோட்’ போன்ற படங்களில் நடித்தவர் மீனாட்சி சவுத்ரி. துல்கர் சல்மான் ஜோடியாக நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மீனாட்சி சவுத்ரியின் ‘மார்க்கெட்’ வெகுவாக உயர்ந்துள்ளது.

தற்போது தெலுங்கு படங்களில் மும்முரமாக நடித்து வரும் அவர், பிற மொழிகளிலும் கலக்க ஆயத்தமாகி வருகிறார். அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

இதற்கிடையில் மீனாட்சி சவுத்ரி தனது பெயரில் மாற்றம் செய்துள்ளார். அதாவது மீனாட்சி என்ற பெயரில் கூடுதலாக ‘ஏ’ என்ற ஆங்கில எழுத்தை சேர்த்திருக்கிறார். இந்த பெயர் மாற்றத்தால் தனது வாழ்க்கையில், சினிமா பயணத்தில் நிறைய முன்னேற்றங்களை சந்திக்கலாம் என்று நடிகை தீர்க்கமாக நம்புகிறாராம்.

சமீபகாலமாகவே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு வரும் மீனாட்சி சவுத்ரி, பிரபல ஜோதிடர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் இந்த பெயர் மாற்றத்தை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஜோதிடத்தின் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்து கொண்ட சினிமா பிரபலங்களின் வரிசையில் தற்போது மீனாட்சி சவுத்ரியும் புதிதாக இணைந்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *