பெண்களை மையப்படுத்திய கதையில் நடிகை மேகா ஷெட்டி?|S Mahendar and Megha Shetty in talks for a women-oriented script

சென்னை,
பழம்பெரும் இயக்குனர் எஸ்.மகேந்தர் , நடிகை மேகா ஷெட்டியுடன் பெண்களை மையமாகக் கொண்ட ஒரு படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது நிஜ வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டதாக கூறப்படுகிறது.
குடும்பம் சார்ந்த மற்றும் பெண்களை மையமாகக் கொண்ட கதைகளுக்கு பெயர் பெற்ற எஸ். மகேந்திரன், தற்போது சமூக யதார்த்தங்களை எடுத்துக்காட்டும் ஒரு ஸ்கிரிப்டை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
கன்னடத்திற்கு அப்பால் பரந்த பார்வையாளர்களை சென்றடைய பல மொழிகளில் இப்படத்தை வெளியிட குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஜோதே ஜோதேயாலி’ சீரியல் மூலம் தனக்கென பெயரைப் பெற்ற நடிகை மேகா ஷெட்டி, தற்போது சாண்டல்வுட்டில்(கன்னட சினிமா) அதிகம் விரும்பப்படும் நடிகையாக வலம் வருகிறார்.
டிரிபிள் ரைடிங் படத்தின் மூலம் சாண்டல்வுட்டில் நுழைந்த மேகா ஷெட்டி , தற்போது வினய் ராஜ்குமாருக்கு ஜோடியாக ‘கிராமாயணம்’ படத்தில் நடித்து வருகிறார். பிரஜ்வால் தேவராஜுக்கு ஜோடியாக ‘சீட்டா’ படத்திலும் நடிக்கிறார்.