பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி?

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி?


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை 2’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர் மிஷ்கின் இயக்கத்தில் டிரெயின் படத்திலும், ஆறுமுக குமார் இயக்கத்தில் ஏஸ் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

மேலும் ‘கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன்’ போன்ற படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். நித்யா மேனம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதற்கிடையில், நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் பூரி ஜெகன்நாத் ‘போக்கிரி, பிசினஸ்மேன், டெம்பர், லிகர், டபுள் இஸ்மார்ட்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி இயக்குனர் பூரி ஜெகன்நாத்திடம் கதை கேட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. விரைவில் இவர்களது கூட்டணியில் உருவாக உள்ள புதிய படம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *