பூஜா ஹெக்டேவின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள்…வைரல்|Pooja Hegde’s birthday celebration photos…go viral

சென்னை,
தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
இதன்பின் தெலுங்கு மற்றும் இந்தி பக்கம் தனது கவனத்தை திருப்பினார். அல்லு அர்ஜுன் உடன் இவர் நடித்த ‘அலா வைகுண்டபுரம்’ திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.
பின்னர் மீண்டும் தமிழில் எண்ட்ரி கொடுத்த பூஜா, பீஸ்ட், ரெட்ரோ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது விஜய்யுடன் ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இளைஞர்களின் மனம் கவர்ந்த பூஜா ஹெக்டே நேற்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கிடையில், பூஜா ஹெக்டேவின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.