புஷ்பா 2-ல் குறைவான காட்சி – மனம் திறந்த அனசுயா |Anasuya opens up about having limited screen time in Pushpa 2

புஷ்பா 2-ல் குறைவான காட்சி – மனம் திறந்த அனசுயா |Anasuya opens up about having limited screen time in Pushpa 2


சென்னை,

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் புஷ்பா 2. இது பல ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருந்தாலும், சுனில் மற்றும் அனசுயாவின் திரை நேரம் குறைவாக இருந்தது சிலருக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

மங்களம் ஸ்ரீனு மற்றும் தாக்சயணி கதாபாத்திரங்கள் முதல் பாகத்தில் அழுத்தமாக இருந்தாலும், இரண்டாம் பாகத்தில் வெறும் பார்வையாளர்களாக இருந்ததாக பலரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை அனசுயா இது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,

‘புஷ்பா: தி ரைஸ் வெளியானபோது, எனது கதாபாத்திரத்தை இன்னும் அதிக நேரம் திரையில் காண விரும்புவதாக மக்கள் என்னிடம் சொன்னார்கள். ஆனால், இப்போது, புஷ்பா 2-ஐ விட புஷ்பா 1-ல் எனது பங்கு அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

எனது குறைந்த திரை நேரம் குறித்து பார்வையாளர்கள் வருத்தம் தெரிவிப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. இது உண்மையில் ஒரு பாராட்டு.” என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *