புதுமுகங்களை வைத்து காதல் படம் இயக்கும் மணிரத்னம்

புதுமுகங்களை வைத்து காதல் படம் இயக்கும் மணிரத்னம்


36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘தக் லைப்’. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

‘தக் லைப்’ படத்தின் முதல் பாடலான ‘ஜிங்குச்சா’ வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் ‘ஜிங்குச்சா’ பாடல் யூடியூபில் 2 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இப்பாடலை கமல்ஹாசன் வரிகளில் ஆதித்யா, வைஷாலி சமந்த், சக்தி ஸ்ரீ கோபாலன் இணைந்து பாடியுள்ளனர். வருகிற மே 16-ந் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘தக் லைப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

‘தக் லைப்’ படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக காதல் பின்னணியில் முழுக்க புதுமுகங்களை வைத்து படமொன்றை இயக்க மணிரத்னம் முடிவு செய்திருக்கிறார். இதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதன் கதை இறுதியாகிவிட்டாலும், திரைக்கதையில் சில மாற்றங்களை மட்டும் செய்து வருகிறார் மணிரத்னம். இப்படத்தினை தொடங்கி ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளார் மணிரத்னம். சமகால காதலர்களை மனதில் வைத்து இதனை எழுதியிருக்கிறார். இதற்கும் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் பணிபுரியவுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *