புதிய சவாலை ஏற்ற வரலட்சுமி சரத்குமார்…ரசிகர்கள் வாழ்த்து|Varalaxmi Sarathkumar turns director with Saraswathi

சென்னை,
தமிழ் , தெலுங்கில் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த வரலட்சுமி சரத்குமார், இப்போது ஒரு புதிய சவாலை ஏற்க உள்ளார். அவர் ஒரு தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் அறிமுகமாக போகிறார்.
தனது சகோதரி பூஜா சரத்குமாருடன் சேர்ந்து, தோசா டைரீஸ் என்ற புதிய தயாரிப்பு பேனரைத் தொடங்கியுள்ளார். இவர்களது முதல் படத்திற்கு ”சரஸ்வதி” என்று பெயரிடப்பட்டுள்ளது. வரலட்சுமி இதை தயாரிப்பது மட்டுமில்லாமல் இயக்கி, முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்.
திரில்லர் படமாக உருவாகும் சரஸ்வதியில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி மற்றும் நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். வரலட்சுமி சரத்குமாரின் இந்த முயற்சிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.