புடினால் ஏற்பட்ட பேரிழப்பு… கசிந்த தகவலால் அம்பலமான வடகொரிய வீரர்களின் பரிதாப நிலை

புடினால் ஏற்பட்ட பேரிழப்பு… கசிந்த தகவலால் அம்பலமான வடகொரிய வீரர்களின் பரிதாப நிலை


மாஸ்கோ மருத்துவமனை ஒன்றில் இருந்து கசிந்த தகவலில், ரஷ்ய ஜனாதிபதி புடினால் வடகொரிய இராணுவம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அம்பலமாகியுள்ளது.

மாஸ்கோவின் பல மருத்துவமனைகள்

மாஸ்கோ மருத்துவமனை ஒன்றில் பணியாறும் நர்ஸ் மற்றும் அவரது கணவர் இடையே நடந்த அலைபேசி உரையாடலை உக்ரைன் பாதுகாப்பு சேவை பதிவு செய்துள்ளது.

புடினால் ஏற்பட்ட பேரிழப்பு... கசிந்த தகவலால் அம்பலமான வடகொரிய வீரர்களின் பரிதாப நிலை | Leaked Audio Reveals North Korean Losses

அதிலேயே, மாஸ்கோவின் பல மருத்துவமனைகள் தற்போது வடகொரிய இராணுவத்தினரால் நிரம்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மாஸ்கோவில் உள்ள ஒரு மருத்துவமனையின் செவிலியருக்கும் கார்கிவ் பகுதியில் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் அவரது கணவருக்கும் இடையேயான அலைபேசி உரையாடலில் இருந்தே வடகொரிய வீரர்களின் பரிதாப நிலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மட்டுமின்றி, அந்த உரையாடலில், இரண்டு நாட்களில் சுமார் 200 வடகொரிய வீரர்கள் தாம் பணியாற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நர்ஸ் குறிப்பிடுகிறார்.

அத்துடன், இனி எத்தனை பேர்கள் மருத்துவமனை சிகிச்சைக்காக காத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என கூறுகிறார். மேலும், காயம்பட்ட ரஷ்ய வீரர்களுக்கான சிகிச்சையே மிக மோசமான கட்டத்தில் இருக்க, தற்போது வடகொரிய வீரர்களால் மருத்துவமனைகள் நிரம்புவதாக புகார் தெரிவித்துள்ளார்.

மிக ஆபத்தான போர் முனையில்

மட்டுமின்றி, மொழிப்பிரச்சனையும் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், வடகொரிய வீரர்களிடம் ஆங்கிலத்தில் பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புடினால் ஏற்பட்ட பேரிழப்பு... கசிந்த தகவலால் அம்பலமான வடகொரிய வீரர்களின் பரிதாப நிலை | Leaked Audio Reveals North Korean Losses

இந்த நிலையிலேயே, ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து போரிடும் பல நூறு வடகொரிய வீரர்கள் காயம்பட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர் என அமெரிக்க இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தமது கிடைத்த உளவுத்துறை தகவலை வெளியிட்டுள்ளார்.

வடகொரிய வீரர்கள் போர்க்களத்திற்கான பயிற்சிகள் எதையும் முன்னெடுக்கவில்லை என்றும், இதனாலையே பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புடினால் ஏற்பட்ட பேரிழப்பு... கசிந்த தகவலால் அம்பலமான வடகொரிய வீரர்களின் பரிதாப நிலை | Leaked Audio Reveals North Korean Losses

உக்ரைனுக்கு எதிராக போரிட வடகொரிய வீரர்கள் 11,000 பேர்களை ரஷ்யா களமிறக்கியுள்ளது. மேலும், மிக ஆபத்தான போர் முனையில் வடகொரிய வீரர்களை ரஷ்யா களமிறக்கியுள்ளது எனவும் தகவல் கசிந்துள்ளது.

இதனால், ரஷ்ய இராணுவத்தில் இழப்பு எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என்றே விளாடிமிர் புடின் திட்டமிடுகிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *