‘பீனிக்ஸ்’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு

சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவரது மகன் சூர்யா. இவர் ஏற்கனவே விஜய்சேதுபதியுடன் இணைந்து ‘சிந்துபாத்’ என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இந்த நிலையில், விஜய் சேதுபதி மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள ‘பீனிக்ஸ்’. இந்த படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கி உள்ளார். இப்படத்தின் மூலம் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.
பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், நடிகர் சம்பத், நடிகை தேவதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர். ஆக்சன் கதைக் களத்தில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வருகிற 4ந் தேதி வெளியாக உள்ளது.
இதற்கிடையில் இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து, படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழு தற்போது, ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்டுள்ளது.