பிலிம்பேர் விருதை பணம் கொடுத்து வாங்கினேனா? அபிஷேக் பச்சன்

பிலிம்பேர் விருதை பணம் கொடுத்து வாங்கினேனா? அபிஷேக் பச்சன்


அமிதாப்பச்சன் மகனும், முன்னணி பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனை 2007-ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது. அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும், விரைவில் இவர்கள் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாகவும் பரவலாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன. மும்பையில் நடந்த பிரம்மாண்டமான விருந்து நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இணைந்து ஒன்றாக கலந்து கொண்டு விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

அபிஷேக் பச்சன் ‘ஐ வொண்ட் டூ டால்க்’ என்ற படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் விருதை வென்றார். ஆனால் அந்த விருதை அவர் திறமையால் வெல்லவில்லை பணம் கொடுத்தும், பிஆர் வேலைகள் செய்தும்தான் வாங்கினார் என்று சமூக வலைதளங்களில் சர்ச்சை வெடித்தது.

View this post on Instagram

A post shared by Filmfare (@filmfare)

இந்நிலையில் இதுதொடர்பாக அபிஷேக் பச்சன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார். “ஒரு விஷயத்தை நான் தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். நான் எந்த விருதையும் பிஆர் வேலைகள் செய்தோ, பணம் கொடுத்தோ வாங்கியதில்லை.நான் செய்ததெல்லாம் கடின உழைப்புதான். ரத்தம், வியர்வை, கண்ணீர் சிந்தியிருக்கிறேன். ஆனால் நான் சொல்வதை நீங்கள் நம்பப்போவதில்லை என்றும் எனக்கு தெரியும்.அதனால் உங்களை அமைதிப்படுத்த சிறந்த வழி என்னவென்றால் இன்னும் கடினமாக உழைப்பதுதான். அப்போதுதான் எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் எந்த விருதையும், நான் செய்யப்போகும் சாதனையையும் நீங்கள் சந்தேகப்படமாட்டீர்கள்.உங்கள் நினைப்பை நான் தவறென்று நிரூபிப்பேன்” என்று அபிஷேக் பச்சன் பதிவிட்டுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *