பிரபாஸ் படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகர்?

ஐதராபாத்,
துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா, கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், சுமந்த் நடிப்பில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் சீதா ராமம் . இந்த வெற்றிப்பட இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில்தான் பிரபாஸ் தனது அடுத்து படத்தில் நடித்து வருகிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். பிரபாஸுக்கு ஜோடியாக இன்ஸ்டா பிரபலம் இமான்வி நடிக்கிறார். இது இவரது அறிமுக படமாகும். படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, பாலிவுட் நடிகர் அனுபம் கெர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால், கார்த்திகேயா 2 மற்றும் டைகர் நாகேஸ்வர ராவ் படங்களுக்குப் பிறகு இவர் நடிக்கும் மூன்றாவது தெலுங்குப் படமாக இது இருக்கும். இருப்பினும், படக்குழுவிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.