பிரபாஸ் கொடுத்த 'ஸ்பிரிட்' படத்தின் அப்டேட்

சென்னை,
நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சலார்’ மற்றும் ‘கல்கி 2898 ஏடி’ படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதில், ‘கல்கி 2898 ஏடி’ ரூ.1,100 கோடி வசூலித்திருக்கிறது. இந்த படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அதன்படி, ‘ஸ்பிரிட்’, ‘சலார் 2’ மற்றும் ‘ராஜா சாப்’ உள்ளிட்ட பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ‘ஸ்பிரிட்’ படம் பிரபாஸின் 25-வது படமாகும். இதனை, ‘அர்ஜுன் ரெட்டி’ மற்றும் ‘அனிமல்’ ஆகிய படங்களை இயக்கி பிரபலமான சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்க உள்ளார்.
இந்த படத்தில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படம் சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளது. பிரபாஸுக்கு வில்லனாக கொரியன் சூப்பர் ஸ்டார் மா டோங்-சியோக் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சைப் அலிகான் – கரீனா கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, நேற்று இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா நேற்று பிறந்த நாளை கொண்டினார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நடிகர் பிரபாஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவிட்டிருந்தார். அதில், “சந்தீப் சகோதரருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், ஸ்பிரிட் படத்தின் படப்பிடிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்”, எனக் கூறியுள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.