பிரபாஸின் ”ஸ்பிரிட்” படத்திற்காக சந்தீப் ரெட்டி வங்காவை சந்தித்த பிரபல நடிகர்|Blockbuster actor meets Sandeep Reddy Vanga for Prabhas’ Spirit

பிரபாஸின் ”ஸ்பிரிட்” படத்திற்காக சந்தீப் ரெட்டி வங்காவை சந்தித்த பிரபல நடிகர்|Blockbuster actor meets Sandeep Reddy Vanga for Prabhas’ Spirit


ஐதராபாத்,

இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவின் அடுத்த பெரிய முயற்சியாக ”ஸ்பிரிட்” உருவாகி வருகிறது. இதில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். திரிப்தி டிம்ரி கதாநாயகியாக நடிக்கிறார்.

படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வரும்நிலையில், படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகமா இருக்கிறது. இந்நிலையில், சந்தீப் ரெட்டி வாங்காவை ஐதராபாத்தில் உள்ள அவரின் புதிய அலுவலகத்தில் பிரபல நடிகர் உபேந்திரா லிமாயி சந்தித்திருக்கிறார்.

சந்திப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட அவர், “ஐதராபாத்தில் உள்ள பத்ரகாளி பிக்சர்ஸ் அலுவலகத்தில் ரெட்டி சகோதரர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. ரெட்டி சகோதரர்கள் ஸ்பிரிட்டில் உள்ளனர் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவின் மூலம், அவர் ஸ்பிரிட் படத்தில் இணைந்திருப்பதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தி உள்ளார் எனலாம்.

அனிமல் படத்தில் பிரெடி மற்றும் சங்கராந்திகி வஸ்துன்னம் படத்தில் ஜெயிலர் ஜார்ஜ் ஆண்டனி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் உபேந்திரா லிமாயி.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *