பிரபாஸின் ''ஸ்பிரிட்'' படத்தில் இணையும் விஜய் பட நடிகை?

சென்னை,
பிரபாஸ், தற்போது ‘தி ராஜசாப்’ மற்றும் ‘பவுஜி’ ஆகிய படங்களில் மும்முரமாக உள்ளார். இவை தவிர, இன்னும் பல படங்கள் அவர் கைவசம் உள்ளன. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படமும் அதில் ஒன்று.
இப்படத்தில் பாலிவுட் நடிகை திரிப்தி திம்ரி கதாநாயகியாக நடிக்கிறார். படப்பிடிப்பு நவம்பர் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மலையாள நடிகை மடோனா செபாஸ்டியன் ‘ஸ்பிரிட்’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அவருக்கு இரண்டாவது கதாநாயகி கதாபாத்திரமா? அல்லது அது ஒரு எதிரி கதாபாத்திரமா? என்பது இன்னும் தெரியவில்லை.
மடோனா செபாஸ்டியன், மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர், தமிழில் பல படங்களில் நடித்தார். விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து வரவேற்பை பெற்றார்.