பிரபாஷுக்கு விரைவில் திருமணமா? – ராம் சரண் கூறியது என்ன?|Will Prabhas get married soon?

பிரபாஷுக்கு விரைவில் திருமணமா? – ராம் சரண் கூறியது என்ன?|Will Prabhas get married soon?


சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாதநிலையில், எப்போது திருமணம் செய்ய போகிறார்? யாரை திருமணம் செய்ய போகிறார் என்ற ஆவலுடன் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

பிரபாஷின் திருமணம் குறித்து அவ்வப்போது சில வதந்திகள் பரவி கொண்டுதான் வருகின்றன. இந்நிலையில், நடிகர் ராம் சரண் பிரபாஷின் திருமணம் பற்றி பேசி இருக்கிறார்.

நடிகர் ராம்சரண், ‘கேம் சேஞ்ஜர்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடிகர் பாலகிருஷ்ணா நடத்தும் ‘அன்ஸ்டாபபிள்’ என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் பாலகிருஷ்ணா பிரபாஸின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ராம்சரண், ”பிரபாஷின் மனைவி ஆந்திராவில் உள்ள மேற்கு கோதாவரி நகருக்கு அருகிலுள்ள கானபவரம் என்கிற ஊரைச் சேர்ந்தவராக இருக்கலாம்” என்று கூறினார். இதனையடுத்து விரைவில் பிரபாஸின் திருமணத்திற்கான அறிவிப்பு வெளியானாலும் ஆகலாம் என்று தெரிகிறது.



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *