பிரபல சினிமா டைரக்டர் விமான நிலையத்தில் கைது

மும்பை,
மலையாள சினிமாவில் பிரபல டைரக்டராக திகழ்பவர் சனல் குமார் சசிதரன். இவர் மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இதனிடையே, சனல் குமார் சசிதரன் தனக்கு ஆன்லைன் மூலம் மிரட்டல் விடுத்ததாக பிரபல மலையாள நடிகை கடந்த ஜனவரி மாதம் ஏலக்கரா போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அந்த சமயத்தில் சனல் குமார் சசிதரன் அமெரிக்காவில் இருந்தார். இதையடுத்து, சசிதரன் மீது கேரள போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.
இந்நிலையில், சசிதரன் அமெரிக்காவில் இருந்து இன்று இந்தியா வந்தார். மராட்டியத்தின் மும்பை விமான நிலையத்திற்கு வந்த சசிதரனை விமான நிலையத்திலேயே அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சசிதரன் கேரளாவுக்கு அழைத்து வரப்பட உள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.