பிரபல இந்தி நடிகர் மாரடைப்பால் உயிரிழப்பு

சண்டிகர்,
பஞ்சாபை சேர்ந்த நடிகர் வரேந்தர் சிங் குமன் (வயது 42). இவர் இந்தி, பஞ்சாபி மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பாடி பில்டரான இவர் 2009ம் ஆண்டு மிஸ்டர் இந்தியா பட்டம் வெற்றார். சினிமாவில் நடித்துக்கொண்டே பாடி பில்டிங் துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், வரேந்தர் சிங் நேற்று மாலை வழக்கமான பரிசோதனைக்காக பஞ்சாபிம் அம்ரித்சரில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவ பரிசோதனையின்போது வரேந்திர் சிங்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில், அவர் உடனடியாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாடி பில்டிங், சினிமா துறையில் சிறப்பாக செயல்பட்டு வந்த வரேந்தார் சிங் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.