பிரபல இந்தி டைரக்டர் மாரடைப்பால் உயிரிழப்பு

பிரபல இந்தி டைரக்டர் மாரடைப்பால் உயிரிழப்பு


மும்பை,

பிரபல இந்தி டைரக்டர் சந்திர பரோட் (வயது 86). இவர் இந்தியில் பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக, 1978ம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி பிரமாண்ட வெற்றிபெற்ற டான் படத்தை சந்திர பரோட் இயக்கினார். மேலும், ஷாருக் கான், ரன்வீர் சிங் உள்பட பல்வேறு இந்தி நடிகர்களை கொண்டு பல்வேறு திரைப்படங்களை சந்திர பரோட் இயக்கினார்.

இதனிடையே, வயது முதிர்வு காரணமாக திரைத்துறையில் இருந்து விலகிய சந்திர பரோட் மும்பையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். அதேவேளை, உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டைரக்டர் சந்திர பரோட் இன்று அதிகாலை 6.30 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *