பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மருத்துவமனையில் அனுமதி|Famous music composer Shankar Ganesh admitted to hospital

பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மருத்துவமனையில் அனுமதி|Famous music composer Shankar Ganesh admitted to hospital


சென்னை,

இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மூச்சுத் திணறலால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

80-களில் பிரபல இசையமைப்பாளராக இருந்தவர் சங்கர் கணேஷ். இப்போதும் ஆக்டிவாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடல் பாடி வருகிறார்.

இந்நிலையில், மூச்சு திணறல் ஏற்பட்டு சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒரு விழாவில் பாடல் பாடுவதற்காக சென்றுக்கொண்டிருந்தபோது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் உடனடியாக அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *