பிரதீப் ரங்கநாதனை பற்றி கவின் சொன்ன வார்த்தை|What kavin said about Pradeep Ranganathan

பிரதீப் ரங்கநாதனை பற்றி கவின் சொன்ன வார்த்தை|What kavin said about Pradeep Ranganathan


சென்னை,

கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக ஹிட் கொடுத்த பிரதீப், அடுத்து லவ் டுடே மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்தது. அடுத்து டிராகன் மூலம் அடுத்த ரூ.100 கோடி படத்தை கொடுத்தார்.

சமீபத்தில் டியூட் மூலம் தொடர்ந்து 3-வது முறையாக ரூ.100 கோடி படத்தை கொடுத்து சாதனை படைத்தார். இந்நிலையில், பிரதீப்பின் இந்த வளர்ச்சி குறித்து கவின் சொன்ன வார்த்தை இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் பேசுகையில், “பிரதீப் ரங்கநாதனை நான் ஒரு எமெர்ஜிங் ஸ்டாராகப் பார்க்கவில்லை, அவரை ஏற்கனவே ஸ்டாராகதான் பார்க்கிறேன். தொடர்ந்து 3 முறை ரூ.100 கோடி படங்களை கொடுப்பது எளிதல்ல.

அதற்கு அதிர்ஷ்டமோ அல்லது வேறு ஏதோ காரணமில்லை. அவர் கதை மற்றும் பிறவற்றை சரியாகத் திட்டமிடுகிறார், அதனால்தான் அது நடக்கிறது’ என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *