பிரதீப் ரங்கநாதனின் “எல்.ஐ.கே” படத்தின் 2வது பாடல் வெளியானது

பிரதீப் ரங்கநாதனின் “எல்.ஐ.கே” படத்தின் 2வது பாடல் வெளியானது


சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தினை தயாரித்துள்ளன. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பேன்டஸி காதல் கதைக்களத்தில் உருவான இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், ‘எல்.ஐ.கே’ படத்தின் 2வது பாடல் ‘பட்டுமா’ வெளியானது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இப்படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *