பிரணவ் மோகன்லாலின் “டைஸ் ஐரே” டிரெய்லர் வெளியீடு

பிரணவ் மோகன்லாலின் “டைஸ் ஐரே” டிரெய்லர் வெளியீடு


மலையாள சினிமாவில் ‘ரெட் ரெயின்’ என்ற திரில்லர் படம் மூலமாக இயக்குனரானவர், ராகுல் சதாசிவன். இவரது இயக்கத்தில் மம்முட்டி நடித்து 2024-ம் ஆண்டு வெளியான ‘பிரமயுகம்’ திரைப்படங்கள், ஹாரர் வகையில் வித்தியாசமாக அமைந்திருந்தது. ‘பிரமயுகம்’ படத்தை தயாரித்த நிறுவனம், மீண்டும் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் மோகன்லாலின் மகன், பிரணவ் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் 25 ஆம் தேதி துவங்கி சரியாக ஒரு மாதத்தில் நிறைவடைந்தது. திகிலாக உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ‘டைஸ் ஐரே’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘டைஸ் ஐரே’ என்ற சொற்றொடர் ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் பயன்படுத்தப்படும் 13-ம் நூற்றாண்டின் லத்தீன் பாடலில் இருந்து வந்தது. இதன் பொருள், ‘ஆன்மாக்கள் நியாயம் தீர்க்கப்பட்டு சொர்க்கம் அல்லது நரகத்திற்கு அனுப்பப்படும் இறுதித் தீர்ப்பு’ என்பதாகும். ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் நைட் ஷிஃப்ட் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், ‘டைஸ் ஐரே’ படத்தின் டிரெய்லர் வெளியானது. ஹாரர் படமாக உருவான இதன் காட்சிகள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *