பிக் பாஸ் நிகழ்ச்சி: திரைப்பிரபலங்கள் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

சென்னை,
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்திய அளவில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியை முன்னணி நட்சத்திரங்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 19 நிகழ்ச்சியை சல்மான்கான் தொகுத்து வழங்குகிறார். அவருக்கு சம்பளமாக ரூ.300 கோடி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. வாரத்தின் இரண்டு நாட்கள் மட்டுமே அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு ஒரு நாளைக்கு ரூ.10 கோடி சம்பளமாக கொடுக்கப்படுகிறது.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் 7-வது சீசனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அவர் ரூ.130 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் விலகிய பிறகு 8-வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார் அவர் ரூ.60 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது.
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார்.அவருக்கு சம்பளமாக ரூ.30கோடி கொடுக்கப்பட்டுள்ளது. கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளரான கிச்சா சுதீப்புக்கு ரூ.20 கோடி வழங்கப்பட்டுள்ளது. மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியை மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். அவருக்கு ஒரு சீசனுக்கு ரூ.18 கோடி சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.