பா.ரஞ்சித் இயக்கும் ‘வேட்டுவம்’ பட அப்டேட்

பா.ரஞ்சித் இயக்கும் ‘வேட்டுவம்’ பட அப்டேட்


சென்னை,

தமிழ் சினிமாவின் முனனணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இவர் இயக்கிய ‘அட்டகத்தி, கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இரவது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான தங்கலான் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது ‘வேட்டுவம்’ என்ற புதிய படத்தை எழுதி இயக்கி வருகிறார். இப்படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். நடிகர் ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாக உள்ள இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் இன்று காரைக்குடியில் தொடங்கியுள்ளது. இதற்கிடையில், இப்படத்தில் அசோக் செல்வன் மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *