பா. ரஞ்சித்தின் "வேட்டுவம்" படப்பிடிப்பு அப்டேட்

பா. ரஞ்சித்தின் "வேட்டுவம்" படப்பிடிப்பு அப்டேட்


சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இவர் இயக்கிய ‘அட்டகத்தி, கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இரவது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது ‘வேட்டுவம்’ என்ற புதிய படத்தை எழுதி இயக்கி வருகிறார். இப்படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளார். மேலும், அசோக் செல்வன், கலையரசன், லிங்கேஷ் மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகியாக சோபிதா துலிபாலா நடிக்கிறார். இந்தப் படமானது கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற முடிந்துள்ளது. அதாவது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்றதாகவும், அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டிருக்கிறதாம். மேலும் இந்த படப்பிடிப்பில் படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர்களும் பங்கேற்பார்கள் எனவும் தகவல் வெளியாகி வருகின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *