பாலையாவின் “அகண்டா 2” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பாலையாவின் “அகண்டா 2” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சிறந்த தெலுங்கு திரைப்படத்திற்கான தேசிய விருதை இவரது நடிப்பில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்திற்கு வழங்கினர்.

கடந்த 2021-ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் ‘அகண்டா’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் 2021-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த ஒன்றாக அமைந்தது. இதில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதன் முதல் பாகத்தில் மாபெரும் வரவேற்பினைத் தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் குழுவினரே இரண்டாம் பாகத்திலும் பணிபுரிகின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதா எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

இந்த நிலையில், ‘அகண்டா 2’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 5ந் தேதி வெளியாக உள்ளது. அதே தேதியில் பிரபாஸின் தி ராஜா சாப் படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *