பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு இப்படி ஒரு மூட நம்பிக்கையா?

மும்பை,
இந்திய திரை உலகில் மட்டுமின்றி சர்வதேச அளவில் ரசிகர்களை கொண்டவர் ஷாருக்கான். தனக்கு மூட நம்பிக்கை இருப்பதாக அளித்த பேட்டியில், நான் ‘ஓடுகிற’ காட்சி இருந்தால் அந்த படம் பெரிய வெற்றி பெறும். டார் படத்தில் சன்னியை விட்டு விட்டு ஓடிய போது அந்த படம் வெற்றி பெற்றது. கரன் அர்ஜூன் படத்தில் ஓடினேன் வெற்றி பெற்றது. தில்வாலே படத்தில் ஒரு பெண்ணை துரத்திக் கொண்டே இருந்தேன்.
அது போல் இப்போது கொய்லா படத்தில் நிறைய ஓடினேன். சில நேரங்களில் நாய்களை பின் தொடர்கிறேன். சில நேரங்களில் வில்லன்களை பின் தொடர்கிறேன். வில்லன்களுக்கு பயந்து ரெயில்களை பின் தொடர்கிறேன். எனவே படத்தில் நான் ஓடினால் படம் வெற்றி பெறும் என எனக்கு ஒரு மூட நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.