பாலிவுட் செல்கிறாரா அல்லு அர்ஜுன்? – ’லவ் அண்ட் வார்’ பட இயக்குனருடன் சந்திப்பு|Allu Arjun In SLB Love And War

மும்பை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியை மும்பையில் உள்ள அவரது அலுவலகத்தில் அல்லு அர்ஜுன் சந்தித்திருக்கிறார்.
அல்லு அர்ஜுன் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி இருவரும் பல மாதங்களாக ஒரு படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதற்காக இருவருக்கும் இடையே ஒரு முக்கிய சந்திப்பு தற்போது நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, அல்லு அர்ஜுன் பாலிவுட் செல்கிறாரா? என்று இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.
சஞ்சய் லீலா பன்சாலி தற்போது ஆலியா பட், ரன்பீர் கபூர் மற்றும் விக்கி கவுஷல் ஆகியோருடன் லவ் அண்ட் வார் படத்தில் பணியாற்றி வருகிறார். அல்லு அர்ஜுன் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் ஒரு படம் செய்யப் போவதாக கூறப்படுகிறது, இந்த ஆண்டின் பிற்பகுதியில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.