பாலிவுட் அறிமுக போஸ்டரை பகிர்ந்த ஷனாயா கபூர்…அனன்யா பாண்டே, சுஹானா கான் கொடுத்த ரியாக்சன்|Ananya Panday and Suhana Khan react as Shanaya Kapoor shares poster of Bollywood debut

சென்னை,
ஷனாயா கபூர், விக்ராந்த் மாஸ்ஸிக்கு ஜோடியாக ”ஆன்கோன் கி குஸ்டாக்கியான்” படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் டீசரை ஷனாயா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
இந்நிலையில், இது குறித்த போஸ்டருக்கு ”கிங்” படத்திற்காக தயாராகி வரும் ஷாருக்கானின் மகள் சுஹானா கான், அனன்யா பாண்டே ஆகியோர் ரியாக்ட் செய்துள்ளனர். அதன்படி, சுஹானா கான், “காத்திருக்க முடியவில்லை” என்றும், அனன்யா பாண்டே ” உற்சாகமாக இருக்கிறேன்” எனவும் பகிர்ந்துள்ளனர்.
‘ஆன்கோன் கி குஸ்டாக்கியான்’ திரைப்படம் ரஸ்கின் பாண்டின் சிறுகதையான ‘தி ஐஸ் ஹேவ் இட்’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தை சந்தோஷ் சிங் இயக்கியுள்ளார்
மான்சி பாக்லா மற்றும் வருண் பாக்லா ஆகியோர் தயாரித்துள்ள இப்படம் ஜூலை 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.