பாலிவுட்டில் தொடர்ந்து 5-வது தோல்வியை சந்திக்கும் மிருணாள் தாகூர்

மும்பை,
தெலுங்கு திரையுலகில் மிருணாள் தாக்கூர் நல்ல வெற்றியைப் பெற்றிருந்தாலும், அவரது பாலிவுட் படங்கள் தொடர்ந்து பின்னடைவுகளைச் சந்தித்து வருகின்றன.
2019 முதல், அவரால் பாலிவுட்டில் ஒரு பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைக் கூட பெற முடியவில்லை. அஜய் தேவ்கனுடன் அவர் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியானா ”சன் ஆப் சர்தார் 2” படமும் அவருக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறது.
அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் இதுவரை இந்தியாவில் ரூ. 26 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது. இதன் மூலம் பாலிவுட்டில் தொடர்ந்து 5-வது தோல்வியை சந்திக்கிறார் மிருணாள் தாகூர்.
இதற்கு நேர்மாறாக, அவரது தெலுங்கு படங்கள் சிறப்பாக செயல்பட்டு, அவருக்கு பேரையும் புகழையும் பெற்றுத் தந்தன.