பாலிவுட்டில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ்…?

சென்னை,
பிரபல பாலிவுட் இயக்குனர் பர்ஹான் அக்தரின் ”டான் 3” படத்தில் ரன்வீர் சிங்குக்கு வில்லனாக நடிக்க நடிகர் அர்ஜுன் தாஸுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது நடக்கும் பட்சத்தில் இந்த படம் அர்ஜுனின் பாலிவுட் அறிமுகத்தை குறிக்கும். கியாரா அத்வானி இதில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இதன் முதல் இரண்டு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஷாருக்கான் இந்த திட்டத்தில் இணையாததையடுத்து, ரன்வீர் சிங் நடிக்க உள்ளார்.
ரன்வீர் சிங் தற்போது ‘துரந்தர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தபடம் வருகிற டிசம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
மறுபுறம், அர்ஜுன் தாஸ் தற்போது பவன் கல்யாணின் ”ஓஜி” படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 25-ம் தேதி வெளியாகிறது. மேலும், பிரபு சாலமனின் ‘கும்கி 2’ படத்திலும் அவர் நடித்து வருகிறார்.