பாலா நடிக்கும் காந்தி கண்ணாடி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

பாலா நடிக்கும் காந்தி கண்ணாடி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு


சென்னை,

சின்னத்திரையில், ரியாலிட்டி ஷோக்களில் அசத்தி வரும் கே.பி.ஒய் பாலா, திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், தனது சம்பளத்தில் பாதியை மக்களுக்கு உதவி செய்து வருகிறார். அதேபோல் திரைப்படம் மற்றும் ஆல்பம் பாடல்களில் கவனம் செலுத்தி வரும் அவர், நடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்.சின்னத்திரையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் கே.பி.ஒய்.பாலா. தனது காமெடியான ஒன்லைனர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை வெள்ளித்திரையில் நடித்து வந்தாலும், பாலா சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது பலரின் கவனத்தை ஈர்த்தது.

மலை கிராம மக்களுக்கு உதவும் வகையில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார். திரைப்படங்களில் நடிப்பது, நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது என பிஸியாக இருக்கும் கே.பி.ஒய் பாலா ஒரு ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். பிரபல நடிகரான ராகவா லாரன்ஸ் போன்றோருடன் இணைந்து தனது தொண்டுகளை விரிவுப்படுத்தியுள்ளார்.

இயக்குநர் ஷெரீப்பின் புதியப் படத்தின் மூலம் பாலா கதாநாயகனாக அறிமுகமாகிறார். நடிகர் வைபவ்வின் 25-வது படமாக ‘ரணம் – அறம் தவறேல்’ எனும் திரைப்படத்தை ஷெரீப் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகை நமிதா கிருஷ்ணமூர்த்தி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் ‘காந்தி கண்ணாடி’ படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சின்னத்திரை நடிகர் பாலா நடித்துள்ள‘காந்தி கண்ணாடி’ படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான சக்தி பிலிம்ஸ் பேக்டரி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘காந்தி கண்ணாடி’ படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *