”பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்திருக்க வேண்டும்”- நடிகர் மீசை ராஜேந்திரன்|”Vijay should have met the victims”

சென்னை,
கரூரில் நேற்று நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தமிழகத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்திருக்க வேண்டும் என்று நடிகரும் தேமுதிக கொள்கை பரப்பு செயலாளருமான மீசை ராஜேந்திரன் தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறுகையில், “புதிதாக கட்சி தொடங்கியபோது, எம்ஜிஆர், விஜயகாந்த் போன்றவர்களுக்கும் ஆளுங்கட்சி தரப்பில் இருந்து நெருக்கடி வந்தது. ஆனால் அதனை அவர்கள் சரியான முறையில் கையாண்டார்கள்.
தன் தொண்டர்களுக்கு ஒரு பிரச்சினை வந்தவுடன், விஜய் கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்திருக்க வேண்டும். அதனைவிடுத்து அவர் சென்னை வந்துவிட்டார். இதை வன்மையாக கண்டிக்கிறேன்” என்றார்.